திருச்சியில் போலி பாஸ்போர்ட் மூலம் இலங்கை செய்ய முயன்ற வாலிபர் கைது..!
திருச்சி விமான நிலையத்தில் இருந்து போலி பாஸ்போர்ட்டில் இலங்கை செல்ல முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு திருநள்ளார் ஆண்டி தெருவை சேர்ந்தவர் உலகநாதன். இவரது மகன் கஜேந்திரன் நேற்று திருச்சி விமான நிலையத்தில் இருந்து இலங்கை செல்ல புறப்பட்டார். அப்போது இமிகிரேஷன் அதிகாரிகள் அவருடைய பாஸ்போர்ட்டை பரிசோதனை செய்தபோது அவர் போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் பெற்றது தெரியவந்தது.
இது தொடர்பாக இமிகிரேஷன் அதிகாரி மெய்யப்பன் திருச்சி ஏர்போர்ட் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் மலைச்சாமி வழக்குப்பதிந்து அவரை கைது செய்தார்.






