ரயிலில் பயணியை கத்தியால் குத்திய சமோசா வியாபாரி..!
சென்னையில் ரயிலில் பயணியை கத்தியால் தாக்கிய சமோசா வியாபாரி கைது செய்யப்பட்டார். திருநின்றவூர் பகுதியை சேர்ந்த 20 வயதான ஆகாஷ் என்பவர் சென்ட்ரலில் இருந்து திருநின்றவூர் மின்சார ரயில் மூலம் பயணம் செய்து கொண்டிருந்தார்.
அப்பொழுது அதே ரயிலில் பெரம்பூர் ரயில் நிலையத்தில் சமோசா வியாபாரி ஒருவர் ஏறி வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்பொழுது ஆகாசுக்கும் சமோசா வியாபாரிக்கும் தகராறு ஏற்பட்ட நிலையில் கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார்.
இது குறித்த விசாரணையில் கத்திக்குத்தில் ஈடுபட்ட ஆவடியை அடுத்து சமோசா வியாபாரி கண்ணதாசன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.






