--- --:--:-- --

2,700° அதி-வெப்பநிலை கொண்ட பாறை..!

9

ன்றைய உலகின் வரைபடத்தைப் பார்க்கும்போது கண்டங்கள் துண்டு துண்டாகச் சிதறிய ஒரு புதிர்போல் தோற்றமளிக்கின்றன. ஆனால், ஒரு காலத்தில் இவை அனைத்தும் பாஞ்சியா (Pangaea) என்ற ஒரே ராட்சத நிலப்பரப்பாக இணைந்திருந்தன.

 

காலப்போக்கில், இந்த மீப்பெருங்கண்டம் பிளவுபட்டு சிதறியது. இது ஒரு முடிவில்லாத கோள்ரீதியான நடனம். பெருங்கடல்கள் உருவாவதும், மறைவதும், கண்டங்கள் ஆயிரக்கணக்கான மைல்கள் மிதந்து செல்வதும், மோதி மலைத்தொடர்களை உருவாக்குவதும் எனப் பூமியின் மேற்பரப்பு தொடர்ந்து மறுவடிவமைப்புக்கு உட்பட்டுக் கொண்டே இருக்கிறது. இந்த அசைவுகளை மறுகட்டமைக்க விஞ்ஞானிகள் பாறைகளில் உள்ள பழங்கால காந்தப்புலங்கள், பாறை அமைப்புகள் மற்றும் காலநிலையுடன் தொடர்புடைய தடயங்கள் போன்ற பல்வேறு நுட்பமான துப்புகளைப் பயன்படுத்துகின்றனர்.

 

பழங்காலத்தில் இருந்து காணாமல்போன பெருங்கடல்களின் தடயங்களையும் இந்த ஆய்வு வெளிப்படுத்துகிறது. உள்இழுவைப் பகுதிகளுக்குள் உறிஞ்சப்பட்டு, புவியின் உள்ளடுக்கின் ஆழத்தில் புதைந்த இந்தப் பெருங்கடல்களின் ‘பேய் உருவங்கள்’ கண்டங்களின் மோதல்களால் பிறந்த மாபெரும் மலைத்தொடர்களில் இன்றும் உள்ளன. இந்தச் சான்றுகளை வைத்து, புவித் தட்டுகள் எவ்வாறு நகர்ந்தன, மோதின, விலகிச் சென்றன என்பதை ஆராய்ந்து, விஞ்ஞானிகள் உருவாக்கும் அமைப்புதான் பழங்கால புவியியல் மறுசீரமைப்பு, ஜியோசயின்ஸ் ஃபிரான்டியர்ஸ்  இதழில் வெளியான புதிய மாதிரி, இதற்கு முன் இருந்த ஆய்வுகளைவிட மிகத் துல்லியமான பார்வையை வழங்குகிறது.

 

இது கடந்த 1.8 பில்லியன் ஆண்டு கால வரலாற்றை, ஒருசில நிமிடங்களில் சுருக்கிக் காட்டுகிறது. அந்த வீடியோவில் நிகழ்காலத்தில் தொடங்கி நேரத்தை பின்னோக்கி செலுத்துகிறது. கோண்டுவானா & பாஞ்சியா: டைனோசர் காலத்தின் அமைப்பான பாஞ்சியா சுமார் 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு எவ்வாறு உருவானது என்பதைக் காண்கிறோம். மேலும் பின்னோக்கிச் செல்லும்போது, 1 பில்லியன் ஆண்டுகளுக்கும் மேலாக ரோடினியா (Rodinia) மற்றும் நூனா (Nuna) போன்ற மாபெரும் மீப்பெருங்கண்டங்களாகக் கண்டங்கள் உடைந்து மீண்டும் ஒன்று சேர்ந்ததையும் பார்க்கலாம்.

 

இந்த நீண்ட புவிப்பொறைப் பரிணாமத்தைப் படிப்பது வெறும் பாறைகளின் இயக்கத்தைப் புரிந்துகொள்வது மட்டுமல்ல. கண்டங்களின் நகர்வு எவ்வாறு உயிர்களின் வளர்ச்சிக்கு வழிகாட்டியது? யுகங்கள் தோறும் காலநிலை மாற்றத்தை இந்த இயக்கம் எவ்வாறு தூண்டியது? இன்று நாம் காணும் நிலப்பரப்புகள் எவ்வாறு செதுக்கப்பட்டன? போன்ற முக்கிய புதிர்களுக்கு விடையளிக்கிறது. இதன் மூலம், நம் பூமி ஒரு நிலையான இடம் அல்ல; அது எப்போதுமே அசைவிலும் மாற்றத்திலும் இருக்கிறது என்ற நிதர்சன உண்மையை உணர்த்துகிறது.

Right Menu Icon