வெங்காய தோசையில் கிடந்த இரும்பு துண்டு.. பிரபல தனியார் ஹோட்டலில் அதிர்ச்சி..!
காஞ்சிபுரம் அருகே செயல்பட்டு வரும் பிரபல தனியார் உணவகத்தில் வழங்கப்பட்ட வெங்காய ஊத்தாப்பத்தில் இரும்பு துண்டு கிடந்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்த வீடியோவை பகிர்ந்த வாடிக்கையாளர் சம்பவங்கள் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த சம்பவம் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.





