கேஸ் சிலிண்டர் குழாய்களை ஆய்வு செய்வதாக கூறி பணம் பெற்ற நபர்..!
திருப்பத்தூர் மாவட்டம் தேவஸ்தானம் கிராமத்தில் கேஸ் சிலிண்டர், ரெகுலேட்டர் மற்றும் குழாய்களை சோதனையிடுவதாக கூறி வீடுகள் தோறும் தலா ரூ.400 வரை வசூலித்தனர். அவர்களை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
வாணியம்பாடியில் உள்ள இன்டேன் கேஸ் ஏஜென்சி மூலம் அந்த நபர்கள் சோதனைக்காக மட்டுமே அனுப்பப்பட்டதாகவும் பணம் வசூலிக்க சொல்லவில்லை என்றும் கூறப்படுகிறது.





