ரேபிஸ் தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தவர் உயிரிழப்பு..!
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே நாய் கடித்ததில் ரேபிஸ் தொற்று பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த ஜான்ஆண்ட்ரூஸ் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த ஆண்டு மட்டும் திருவண்ணாமலை மாவட்டத்தில் 10,479 நாய்கடி சம்பவம் நடந்துள்ளதாகவும் 3 பேர் ரேபிஸ் நோயால் உயிரிழந்துள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.





