உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி..!
தமிழ்நாட்டில் இன்றைய மழை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வரும் 18 ஆம் தேதி வாக்கில் வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.
வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதேபோல், ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மேலும், நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இது தெரிந்தால் இனி பலாக்கொட்டையை தூக்கி எறிய மாட்டீர்கள்.!
இது தெரிந்தால் இனி பலாக்கொட்டையை தூக்கி எறிய மாட்டீர்கள்.!
மத்தியமேற்கு, அதனை ஒட்டிய தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள், கொங்கன்-கோவா கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
அதேபோல், இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், கர்நாடகா – கேரளா கடலோரப்பகுதிகள், அதனை ஒட்டிய மத்தியகிழக்கு – தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள், மற்றும் லட்சதீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.” என்று தெரிவித்துள்ளது.





