--- --:--:-- --

வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு மண்டலம் ..!

2

ங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேற்று ஒரிசா கடலோரப்பகுதிகளை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியானது இன்று காலை 05.30 மணி அளவில் வடக்கு திசையில் நகர்ந்து, வடக்கு வங்கக்கடல் பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்றது.

 

இது தற்போது மேற்கு வங்காளத்தின் வடமேற்கு வங்ககடல் மற்றும் அதை ஒட்டிய வங்கடல் கடற்கரையில் இருந்து சாகர் தீவுக்கு தென்கிழக்கே சுமார் 100 கிமீ, திகாவிற்கு தென்கிழக்கே 130 கிமீ, பாரதீப்பிற்கு கிழக்கு – வடகிழக்கே 190 கிமீ மற்றும் கெபுபரா (வங்காளதேசம்) க்கு மேற்கு-தென்மேற்கே 210 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளது.

 

இது கிட்டத்தட்ட வடக்கு நோக்கி நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் தீவிரமடைந்து, இன்று பிற்பகலுக்குள் மேற்கு வங்கம் – வங்காளதேச கடற்கரைகளை சாகர் தீவுக்கும் கேபுபாரா (வங்காளதேசம்)க்கும் இடையில் கடக்க வாய்ப்புள்ளது.

 

வங்கக் கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறும். இவ்வாறு இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Right Menu Icon