இராமநாதபுரத்தில் அனைத்து வெள்ளாளர் மகா சபை சார்பாக வேளாளர் பெயரை தாரை வார்க்க துடிக்கும் மத்திய மாநில அரசுகளை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..!
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பு அனைத்து வெள்ளாளர் மகா சபையினர் தலைவர் குரு சுப்பிரமணியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் பேசியதாவது: இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பிருந்து எங்களுடைய சமுதாய பெயரான வேளாளர் என்ற பெயரை எங்கள் சமுதாயம் பயன்படுத்தி கொண்டு வருகிறது இத்தகைய வரலாற்று சிறப்பு மிக்க பெயரான வேளாளர் என்ற பெயரை, மாற்று சமுதாயத்திற்கு கொடுப்பதற்காக தமிழக முதல்வர் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருப்பது மிகவும் வேதனையான விஷயம். என்றும் இந்த செயலை மத்திய அரசும், எதிர்நோக்கி காத்து இருந்தது இது வன்மையாக கண்டிக்கதக்கது.
மேலும் எங்களுடைய ஜாதி பெயர், வேளாளர் என்பது தாய், தந்தை நமக்கு கொடுத்த உயிர் போன்றது. இந்த உயிர் நம்மை விட்டு சென்றால் நாம் வாழ முடியாது. அதை நாம் காப்பாற்றி ஆக வேண்டும். நமது வேளாளர் ஜாதி பெயர் பறிபோக காரணமாக இருக்கும் தமிழக முதல்வர் மற்றும் பாரத பிரதமர் ஆகியோரை கண்டித்து கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.






