--- --:--:-- --

குடியிருப்பதற்கு தகுதியற்ற ஆயிரத்து 100 கட்டடங்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ்..!

8

துரை தெற்குமாசி வீதியில் குடியிருப்பதற்கு தகுதியற்ற ஆயிரத்து 100 கட்டடங்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மதுரை விளக்குத்தூண் நவபத்கானா தெருவில் ஜவுளிக்கடையில் தீபாவளியன்று ஏற்பட்ட தீ விபத்தின் போது பணியிலிருந்த 2 தீயணைப்பு வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

 

இதனை தொடர்ந்து பழமையான கட்டடங்கள் பாதுகாப்பானவையா என்பது குறித்து ஆய்வு செய்யுமாறு தீயணைப்பு துறை டிஜிபி உத்தரவிட்டார். விளக்குத்தூண், நான்கு மாசி வீதிகளில் ஆயிரம் கட்டிடங்களுக்கு மேல் பாதுகாப்பு குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

 

மதுரை மாநகராட்சி சார்பிலும் நோட்டீஸ் வழங்கப்பட்டது. தெற்கு மாசி வீதியில் 5 கட்டிடங்களை இடிக்குமாறு மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியும் அங்கிருந்த கடை உரிமையாளர்கள் காலி செய்யவில்லை. இதையடுத்து நேற்று 5 கட்டடங்களுக்கு மாநகராட்சி சீல் வைத்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon