பொதுத்தேர்வுகளில் காப்பியடித்தால் கடும் தண்டனை
10, 11, 12ஆம் வகுப்பு பொது தேர்வுகளில் முறைகேடுகளில் ஈடுபடுவர்கள் மீதான தண்டனை விவரங்களை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி தேர்வு அறைக்குள் துண்டுச் சீட்டுகளை வைத்திருத்தல், விடை குறிப்புகளை வைத்திருத்தலில் தொடர்ந்து ஈடுபட்டால் தேர்வு எழுத அனுமதி மறுக்கப்படும்.
காப்பி அடித்தலில் ஈடுபடும் மாணவர்களுக்கு தேர்வு எழுத இரண்டு ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்படும். ஆள் மாறாட்டம் விடைத்தாள்களை மாற்றுவதில் ஈடுபடும் மாணவர்களுக்கு தேர்வு எழுதுவதற்கு வாழ்நாள் தடை விதிக்கப்படும். அதிக மதிப்பெண் அளிக்க போடும் வார்த்தைகளையோ விடைத்தாளில் குறிப்பிடும் மாணவர்கள் எழுதிய தேர்வு ரத்து செய்யப்படும்.
தேர்வு கண்காணிப்பாளரிடம் முறையில்லாமல் நடந்து கொள்பவர்களுக்கு தேர்வு எழுதுவதற்கு தடை விதிக்கப்படும். வினாத்தாளை வெளியிடுபவர்களுக்கு மூன்று ஆண்டுகள் தடை விதிக்கப்படும். வினாத்தாளில் விடைகளை எழுதி தூக்கி எறிந்தவர்களின் தேர்வு ரத்து செய்யப்படும்.






