--- --:--:-- --

ஓடும் ரயிலில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த கொள்ளை கும்பல்..!

3

மும்பையில் ஓடும் ரயிலில் இளம்பெண் கொள்ளையர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக நான்கு குற்றவாளிகள் கைது செய்யப்பட உள்ள நிலையில் எஞ்சிய 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

 

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து மகாராஷ்டிரா மாநிலம் மும்பை நோக்கி ரயில் விரைந்து சென்று கொண்டிருந்தது. அப்பொழுது ரயிலில் ஆயுதங்களுடன் ஏறிய 8 பேருடன் கூடிய கொள்ளை கும்பல் பயணிகளிடம் கத்தியை காட்டி மிரட்டி கொள்ளை அடித்ததுடன் இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

 

ரயில்வே பாதுகாப்பு படையினர் கொள்ளைக் கும்பலை சேர்ந்த 4 பேரை கைது செய்தனர். தப்பியோடிய மேலும் 4 பேரை தேடி வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண்ணை பெண் காவலர்கள், மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து சென்றுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து அவர்கள் திருடிய பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

Right Menu Icon