பிக் பாஸ் 6 ம் சீசனில் நுழையும் பிரபல செய்தி வாசிப்பாளர்..!
விஜய் டிவியில் பிக் பாஸ் அடுத்த சீசன் விரைவில் தொடங்க இருக்கிறது. அக்டோபர் மாத தொடக்கத்தில் இந்த தொடங்கும் என எதிர் பார்க்கப்படுகிறது. தற்போது இந்த புது சீசனுக்கான முதற்கட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. போட்டியாளர்கள் தேர்வும் இப்போது தொடங்கி இருக்கிறது.
முந்தைய சீசன்களை போல இந்த சீசனில் சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் போட்டியாளராக யாரெல்லாம் வருவார்கள் என ரசிகர்களும் அதிக எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
பாலிமர் நியூஸ் செய்தி வாசிப்பாளர் ரஞ்சித் சமீபத்தில் அளித்திருக்கும் பேட்டியில் அவர் ரியாலிட்டி ஷோவில் 40 நாட்கள் கலந்துகொள்கிறேன் என கூறி இருக்கிறார். அவர் மறைமுகமாக பிக் பாஸ் ஷோவை தான் குறிப்பிட்டு இருப்பதாக தெரிகிறது.





