மலைக் கோயிலில் மயங்கி விழுந்த பக்தர்.. படியில் பிரிந்த உயிர்..!
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் மலை கோயிலில் படியில் ஏறி சென்ற பெங்களூரை சேர்ந்த பக்தர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சோளிங்கரில் 1305 படிகள் கொண்ட லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது.
இங்கு பெங்களூரை சேர்ந்த முத்துக்குமார் என்பவர் குடும்பத்துடன் சென்றார். பராமரிப்பு பணிகளுக்காக ரோப் கார் நிறுத்தப்பட்டதால் ஏமாற்றம் அடைந்த முத்துகுமார் படிகளில் ஏறி சென்றார். 1200 வது படியை கடந்த பொழுது திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கினார்.
உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்ற பொழுது ஏற்கனவே முத்துக்குமார் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.





