அனைவருக்கும் பலன் தரும் பட்ஜெட் : பிரதமர் மோடி
மத்திய பட்ஜெட்டின் வருமானவரி விலக்கு வரம்பு 7 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. விவசாய கடன் இலக்கு 20 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில் பெண்களுக்கான சேமிப்பு திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
2023 – 2024 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். ஒருங்கிணைந்த வளர்ச்சி, அனைவருக்கும் திட்ட பலன்கள், கட்டமைப்பு வசதிகள், திறன்களை பயன்படுத்திக் கொள்ளுதல், இளைஞர்கள் முன்னேற்றம், பசுமை எரிசக்தி உள்ளிட்ட ஏழு அம்சங்களுக்கு முன்னுரிமை தரப்படும் என நிதி அமைச்சர் தெரிவித்தார்.
புதிய புதிய நடைமுறைப்படி ஏழு லட்சம் ரூபாய் வரை கீழான ஆண்டு வருமானம் கொண்டவருக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட் அனைவருக்கும் பலன் அளிக்கும் எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





