54 வயது ஆணுக்கும் 24 வயது பெண்ணுக்கும் காதல்..!
சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் 54 வயதாகும் தறி தொழிலாளி ஆன கிருஷ்ணன். இவர் கடந்த 10 ஆண்டுகளாக கருத்து வேறுபாடு காரணமாக தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
அதே பகுதியை சேர்ந்த 24 வயது முதுகலை பட்டம் மற்றும் ஆசிரியர் பயிற்சி முடித்துள்ள விமலாவிற்கும் கிருஷ்ணனுக்கும் காதல் மலர்ந்தது. திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர்.
இதனால் தனது மகளை காணவில்லை என்று விமலாவின் தந்தை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் தேடி வந்தனர். பாதுகாப்பு கேட்டு புதுமண தம்பதிகளான கிருஷ்ணன் விமலா இருவரும் தாரமங்கலம் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்ததாக தகவல் அறிந்த காவல் நிலையத்திற்கு வந்த விமலாவின் உறவினர்கள் தந்தை வயது உடைய ஒருவரை திருமணம் செய்து கொண்டதால் உன்னுடைய எதிர்காலம் வீணாகிவிடும் என்று அறிவுரை வழங்கி பெற்றோருடன் வந்துவிடுமாறு வற்புறுத்தியுள்ளனர்.
ஆனால் தன் காதலித்து கரம் பிடித்த கணவனோடு தான் செல்வேன் என அடம் பிடித்துள்ளார் விமலா. வேறு வழி இல்லாமல் விமலாவை காதல் கணவர் கிருஷ்ணன் உடன் தாரமங்கலம் காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.





