காதலிக்க மறுத்த இளம் பெண்ணை கொலை செய்த 17 வயது சிறுவன்..!
தர்மபுரி அருகே வனப்பகுதியில் இளம் பெண்ணை கொலை செய்த 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டான். மருந்து நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இளம்பெண் கோவை வனப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார்.
அவரது செல்போனை ஆய்வு செய்த காவல்துறையினர் 17 வயது சிறுவனை பிடித்து விசாரணை நடத்தினர்.
தம்மை காதலிக்க மறுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் அப்பொழுது இளம்பெண்ணை கல்லால் தாக்கி துப்பாட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்ததாகவும் சிறுவன் வாக்குமூலம் அளித்துள்ளான். இதையடுத்து சிறுவனை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





