--- --:--:-- --

விமானத்தில் ஜன்னலோர சீட்டுக்கு தாவி சென்ற பெண்..!

7

விமானத்தில் ஜன்னல் ஓர இருக்கைக்கு சீட்டுகளின் கைப்பிடி மீது ஏறிச் சென்ற பெண்ணுக்கு கண்டனம் குவிந்து வருகிறது. பிரண்டன் என்பவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். விமானத்தில் ஜன்னல் ஓர இருக்கை ஒரு இளம்பெண்ணுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

 

மற்ற பயணிகள் அனைவரும் அமர்ந்துள்ளனர். கடைசியில் வந்த இளம்பெண் இருக்கையின் கைபிடிகளில் கால்வைத்து தன் இருக்கைக்கு செல்கிறார். இந்த வீடியோக்கள் விமானத்தில் நடந்த மோசமான கிரிமினல் நடத்தை இதுவென்று பிரண்டன் தலைப்பிட்டுள்ளார்.

 

மேலும் இந்த பதிவுக்கு பதில் அளித்துள்ள சிலர் விமான பணிப்பெண்கள் அங்கு இல்லையா என கேள்வி எழுப்பி உள்ளனர். அவர்கள் எப்படி இளம்பெண் இப்படி செயல்பட அனுமதித்தனர் என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon