காட்டுயானை தாக்கியதில் ஒருவருக்கு நேர்ந்த சோகம்..!
நீலகிரி அருகே காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் மசினகுடி அருகே ஒரு பழங்குடியின கிராமம் உள்ளது.பசவராஜ் என்பவர் அங்கு உள்ள உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டுயானை பசவராஜை தாக்கியது. அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.






