--- --:--:-- --

நிலச்சரிவில் பள்ளத்தில் கவிழ்ந்த லாரி..!

4

அசாம் மற்றும் மேகாலயாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கீதா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

 

பல்வேறு சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை படகுகள் மூலமாக மீட்கும் பணிகள் நடைபெற்று வந்தன. மழை வெள்ளத்தால் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

இதேபோல மேகாலயாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவால் சாலைதுண்டாக உடைந்தது. பாலத்தில் வாகனங்கள் சிக்கியுள்ளன. அசாம், மிசோரம், திரிபுரா, மணிப்பூர் ஆகிய பகுதிகளை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை உருக்குலைந்து காணப்படுகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon