93 போக்குவரத்து காவல் ரோந்து வாகனங்களை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்..!
சென்னை பெருநகர காவல்துறை மேம்பாட்டுக்காக 93 போக்குவரத்து காவல் போக்குவரத்து வாகனங்களை முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
2021- 2022 ஆம் ஆண்டில் காவல்துறை மானிய கோரிக்கையில் பழுதடைந்த பழைய ரோந்து வாகனங்கள் மாற்றப்பட்டு புதிய வாகனங்கள் வாங்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்தார். மேலும் 10 ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வரும் வாகனங்களுக்கு பதிலாக புதிய ரோந்து வாகனங்களும் வாங்கப்படும் என அறிவித்திருந்தார்.
அதன்படி 14 கோடியே 77 லட்சம் ரூபாயில் வாங்கப்பட்ட 93 போக்குவரத்து காவல் ரோந்து வாகனங்களை முதலமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பொன்முடி, டிஜிபி சைலேந்திரபாபு உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.






