--- --:--:-- --

தீம் பார்க்கில் உள்ள நீச்சல் குளத்தில் மூழ்கி சிறுவன் பலி..!

2

திருப்பூர் அருகே உள்ள ரிசார்ட் பொழுதுபோக்கு தீம் பார்க்கில் நீச்சல் குளத்தில் சிறுவன் பலியானான். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர் திருமுருகன்பூண்டியைச் சேர்ந்த பாஸ்கர் செல்லா கோடை விடுமுறையை கழிக்க தனது மகன்கள் உடன் திருப்பூர் ஊத்துக்குளி ரோட்டில் செயல்பட்டு வரும் தனியார் தீம் ரெசாட்டில் பொழுதுபோக்கு தீம் பார்க்கிற்கு சென்றுள்ளனர்.

 

அங்கு நீச்சல் குளத்தில் விளையாடிக் கொண்டு இருந்ததாக தெரிகிறது. அப்பொழுதுதான் ராபின்சன் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கியதாக கூறப்படுகிறது. அங்கு இருந்தவர்கள் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர்.

 

அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இந்த சம்பவம் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

 

Right Menu Icon