--- --:--:-- --

குடத்துக்குள் மாட்டிக்கொண்ட சிறுவன்..!

3

விழுப்புரம் அருகே குடத்துக்குள் மாட்டிக்கொண்ட 3 வயது சிறுவனை ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். விழுப்புரம் மாவட்டம் பெரியசெவலை புது காலனி பகுதியை சேர்ந்த பாக்கியலட்சுமியின் மூன்றாவது மகன் வசந்த்.

 

அவரது வீட்டில் வைத்திருந்த காலி குடத்துக்குள் இறங்கி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக தவளை குடத்திற்குள் சிறுவன் சிக்கிக்கொண்டான். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சிறுவனின் தாய் பாக்கியலட்சுமி குடத்துடன் திருவெண்ணைநல்லூர் தீயணைப்பு நிலையத்திற்கு சென்றார்.

 

அப்பொழுது ஸ்டீல் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தி உடைத்து. தீயணைப்பு வீரர்கள் சிறுவனை பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Right Menu Icon