ரஜினியுடன் நடிகர் சங்க நிர்வாகிகள் சந்திப்பு..!
நடிகர் ரஜினிகாந்தை நடிகர் சங்க நிர்வாகிகள் சந்தித்து ஆலோசனை நடத்தினார். நடிகர் சங்க தேர்தலில் விஷால் தலைமையிலான பாண்டவர் அணி வெற்றி பெற்றதையடுத்து முதலமைச்சர் மு க ஸ்டாலின், நடிகர் கமல்ஹாசன் உட்பட முக்கிய நபர்களை நடிகர் சங்க புதிய நிர்வாகிகள் சந்தித்தனர்.
அந்த வகையில் ரஜினிகாந்த்தை நடிகர் சங்க நிர்வாகிகள் சந்தித்துள்ளனர். ரஜினி இல்லத்திற்கு சென்ற நடிகர் சங்க தலைவர் , பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர் பூச்சி முருகன் உள்ளிட்டோர் அவருடன் ஆலோசனை நடத்தினர்.
மரியாதை நிமித்தமாக நடிகர் ரஜினிகாந்தை சந்தித்ததாகவும் நடிகர் சங்கத்திற்கு பல முக்கிய ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் ரஜினிகாந்த் வழங்கியதாகவும் தெரிவித்தார்.





