--- --:--:-- --

கோழிக்கறி பிரியாணி சாப்பிட்ட 40 பேர் வாந்தி மயக்கம்..!

4

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே சிக்கன் பிரியாணி சாப்பிட்ட கரும்பு தொழிலாளர்கள் 40 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

திருக்கோவிலூர் அடுத்த கிராமத்தை சேர்ந்த கரும்பு வெட்டும் குழுவினர் தங்களது கரும்பு வெட்டும் பணிகள் முடிவடைந்ததை முன்னிட்டு கோழி கறி பிரியாணி சமைத்து தொழிலாளர்கள் 40 பேர் சாப்பிட்டுள்ளனர். இவர்கள் கோழி பிரியாணி சாப்பிட்டு சில மணித்துளிகளில் அனைவருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.

 

உடனடியாக ஆண்கள் பெண்கள் உட்பட அனைத்து தொழிலாளர்களும் கடலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேல் மருத்துவத்திற்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon