மாலையாக மலை பாம்பை மாற்றிக்கொண்ட மணமக்கள்..!
பாம்பு என்ற பெயரைக் கேட்டாலே ஒரு நிமிடம் செய்யும் வேலையை நிறுத்திவிட்டு பதற்றம் அடைந்து விடுவோம். சிலர் சாலைகளில் கூண்டில் இருக்கும் பாம்பை பார்த்தவுடன் மேல் ஊர்ந்து போவது போல உள்ளது என்பார்கள். சிலர் சற்றும் பயமின்றி பாம்புடன் சாகசம் செய்யும் மனிதர்களும் உண்டு .
இந்த வரிசையில் இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டுள்ள வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் மகாராஷ்டிராவில் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் திருமணம் ஒன்று நடைபெற்றது. ஊர்மக்கள் கூடி நிற்க மணமக்களுக்கு திருமண சடங்குகள் நடைபெற்று வருகிறது.
ஒருகட்டத்தில் மணமக்கள் ஒருவருக்கொருவர் மாலை மாற்றிக் கொள்ளவேண்டிய நேரமும் வந்தது. அவர்களும் மாறினார்கள். ஆனால் நீங்கள் நினைப்பது போல அது மாலை அல்ல மலைப்பாம்பு. வெள்ளை நிற உடையில் இருக்கும் மணமக்கள் இருவரும் பாம்புகளை தங்கள் கழுத்தில் மாற்றிக்கொண்டனர்.
தகவலின்படி மணமக்கள் இருவரும் ஒரு வனவிலங்கு துறை ஊழியர்கள் எனவும் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. இதை கண்டு திகைத்து இணையவாசிகள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





