--- --:--:-- --

நகை வாங்குவது போல நடித்து தங்க சங்கிலியை திருடிய பெண்கள்..!

6

தஞ்சாவூரில் தங்கம் வாங்குவது போல் நடித்து தங்க சங்கிலிகளை திருடிய பெண்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர். கடைக்கு சென்று இரண்டு பெண்கள் தங்க சங்கிலி வேண்டும் எனக் கூற கடை ஊழியரே தங்க சங்கிலிகளை காண்பித்துள்ளார்.

 

அப்போது கடை ஊழியரை திசை திருப்பிய பெண்கள் ஒரு தங்கச் செயினை பறித்து விட்டு அதற்கு பதிலாக கவரிங் செயினை மாற்றி வைத்து விட்டு சென்றுள்ளனர். அதிர்ச்சி அடைந்த கடை உரிமையாளர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon