--- --:--:-- --

ஆபாசப் போஸ்டர் ஒட்டிய மநீம நிர்வாகிகள் இருவர்கள் மீது கேஸ்..!

3

துரையில் ஆபாச வார்த்தைகள் இடம் பெற்ற போஸ்டரை ஒட்டிய மக்கள் நீதி மையம் கட்சி நிர்வாகிகள் இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. உலகம் முழுவதும் வருகிற ஜூன் மாதம் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் விக்ரம் திரைப்படம் வெளிவர உள்ளது.

 

இந்த நிலையில் அதில் இடம்பெற்ற வசனத்தை மையப்படுத்தி மக்கள் நீதி மையம் கட்சி நிர்வாகிகள் மதுரை கிழக்கு தொகுதி செயலாளர் கதிரேசன் மற்றும் மதுரை மண்டல பொறுப்பாளர் வினோத் ஆகிய இருவரும் பல்வேறு பகுதிகளில் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.

 

அந்த போஸ்டரில் சர்ச்சைக்குரிய வகையில் ஆபாசமான வார்த்தை இடம்பெற்றுள்ளது. இதையடுத்து மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் இருவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதை தொடர்ந்து மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள் காவல்துறையினர் அப்புறப்படுத்தினார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon