--- --:--:-- --

பேரறிவாளன் விடுதலை : நாளை காங்கிரஸ் அறப்போராட்டம்

1

பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்து இருக்கும் நிலையில் காங்கிரஸ் கட்சியினர் மன உணர்வை வெளிப்படுத்தும் வகையில் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக அந்த கட்சியின் மாநில தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்திருக்கிறார்.

 

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை விமர்சிக்கவில்லை என்றும் அதே நேரத்தில் குற்றவாளிகள் கொலைகாரர்கள் என்பதையும் அவர்கள் நிரபராதிகள் அல்ல என்பதையும் அழுத்தமாக கூற விரும்புவதாக கே‌எஸ் அழகிரி வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியுள்ளார்.

 

மன உணர்வை வெளிப்படுத்தும் வகையில் அவரவர் பகுதிகளில் கட்சியினர் வெள்ளை துணியால் வாயை கட்டிக்கொண்டு அறப்போராட்டம் நடத்துமாறும் கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.

Right Menu Icon