சமையல் நேரலை நிகழ்ச்சியில் பற்றிய தீ..!
பெண் ஒருவர் நேரலையில் சமையல் செய்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக பாத்திரத்தில் தீப்பிடித்து சமையல் அறை முழுவதும் புகை சூழ்ந்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. சமையலறையில் சமைக்கும் பொழுது மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும்.
இல்லை என்றால் நொடிப்பொழுதில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதற்கு சான்றாக அமைந்துள்ளது இந்த சம்பவம். பெண் சமையலறையில் இறைச்சியை சமைப்பதற்கு வைத்த வேளையில் சமைக்க காத்துக் கொண்டிருந்துள்ளார்.
திடீரென ஏற்பட்ட அந்த பாத்திரம் பற்றி எரிந்து சமையல் அறை முழுக்க பரவியுள்ளது. சமையல் நிகழ்ச்சி நேரலையில் ஒளிபரப்பபட்டதால் இணையவாசிகள் இந்த சம்பவத்தை நேரில் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதற்கிடையே சமைத்துக் கொண்டிருந்த இறைச்சியை காக்க கருவியை பயன்படுத்தி வைத்துள்ளார்.
அங்கு ஏற்பட்ட கடுமையான புகையை கையால் வெளியேற்ற முயன்றிருக்கிறார். ஆனால் அந்த அறை முழுவதும் பரவியுள்ளது. முயற்சி பலனளிக்காமல் நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்தவர்களிடம் தீயை அணைக்க யோசனை கேட்டுள்ளார். சில நொடிகளில் அவரது நேரலை துண்டிக்கப்பட்டுள்ளது. பின்னர் சில மணி நேரங்களுக்குப் பிறகு தன்னை பின்தொடர்பவர்களிடம் தான் நலமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.






