--- --:--:-- --

இங்கிலாந்தில் மேலும் 2 பேருக்கு குரங்கு அம்மை நோய்..!

7

இங்கிலாந்தில் மேலும் இரண்டு பேருக்கு குரங்கு அம்மை நோய் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. சிரியாவில் இருந்து லண்டன் திரும்பிய பிறகு கடந்த 7ஆம் தேதி குரங்கு அம்மை நோய் உறுதி செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

 

லண்டனில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு பேருக்கு குரங்கு அம்மை நோய் கண்டறியப்பட்டுள்ளது. மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்காவில் தொற்றினால் பாதிக்கப்பட்ட விலங்குகளின் மூலம் குரங்கு அம்மை நோய் பரவி இருக்கலாம் என கூறப்படுகிறது.

 

இந்த நோய் இறுதியில் மக்களிடையே பரவாது என்றாலும் நோய் பாதிக்கப்பட்டவர்கள் தனித்து இருப்பது நல்லது என பிரிட்டன் சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon