பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாருக்கு கொரோனா பாதிப்பு..!
பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் கேன்ஸ் திரைப்படவிழாவை தவிர்க்கும் நிலை உருவாகியுள்ளது. பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் அவர் கேன்ஸ் திரைப்பட விழாவின் செல்ல முடியாமல் தவிக்கும் நிலை உருவாகியுள்ளது. சர்வதேச அளவிலான சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமான கேன்ஸ் திரைப்பட விழா 75வது திரைப்பட விழா மே 17ம் தேதி தொடங்க உள்ளது.
ஒவ்வொரு வருடமும் இந்த திரைப்பட விழாவில் கலந்து கொள்ளவும் தங்களின் படம் திரையிடப்படுவது சர்வதேசத் திரை கலைஞர்களின் கனவாக இருந்து வருகிறது. உலகம் முழுவதும் உள்ள திரை கலைஞர்கள் சங்கமிக்கும் கேன்ஸ் திரைப்பட விழா வரும் மே 28ம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த ஆண்டு இந்திய திரைத் துறையின் 12 பிரபல நட்சத்திரங்கள் அடங்கிய குழு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் தலைமையில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான், நடிகர் மாதவன், நயன்தாரா, பூஜா ஹெக்டே உட்பட பலர் கலந்து கொள்கின்றனர். இவர்கள் அனைவருக்கும் கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு சிவப்பு கம்பள வரவேற்பு வழங்கப்படவுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





