--- --:--:-- --

திரிபுரா மாநில முதல்வர் பிப்லப் குமார் ராஜினாமா..!

6

திரிபுரா மாநில முதலமைச்சர் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். பாரதிய ஜனதாவின் சட்டமன்ற உறுப்பினர்கள் திரிபுராவில் புதிய முதலமைச்சரை தேர்வு செய்வார்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

 

திரிபுராவில் பிறந்த பிப்லப் குமார் சில ஆண்டுகள் டெல்லியில் வசித்து வந்தார். முன்னதாக பயிற்சியாளராக இருந்த அவர் பாஜகவில் சேர்ந்து அரசியலில் ஈடுபட்டு வந்தார். இவரது தலைமையிலேயே திரிபுராவில் பாஜக தேர்தலை சந்தித்திருந்த நிலையில் திரிபுரா மாநில முதலமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon