மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகைக்கு எதிர்ப்பு..!
புதுச்சேரியில் தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் அமித்சாவின் உருவபொம்மையை எரிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு நாள் அரசு முறை பயணமாக புதுச்சேரிக்கு வந்துள்ள மத்திய அமைச்சர் அமித்ஷாவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மதச்சார்பற்ற அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு இயக்கங்கள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றன.
இதனால் வாலாஜா திரையரங்கம் அருகே தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் சுமார் 200க்கும் மேற்பட்டோர் ஒன்று கூடிதிரும்பிப் போ அமித்ஷா என்ற கோஷங்களை முன்வைத்து எதிர்ப்பை பதிவு செய்து அமைச்சரின் உருவ பொம்மையை எரிக்க முயன்றனர்.
இதனால் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து போராட்டக்காரர்கள் 200க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.





