--- --:--:-- --

பெண் எஸ்.ஐ.யிடம் தொலைபேசியில் நலம் விசாரித்த முதலமைச்சர்..! 5 லட்சம் ரூபாய் நிவாரணம்..!

1

நெல்லையில் பெண் காவல் உதவி ஆய்வாளர் கத்தியால் குத்தப்பட்ட தாக்குதலுக்கு அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்திருக்கும் நிலையில் உதவி ஆய்வாளர் 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார்.

 

அபராதம் விதித்ததற்காக உதவி ஆய்வாளர் மார்க்ரெட் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்திற்கு எடப்பாடி பழனிசாமி டுவிட்டரில் கண்டனம் தெரிவித்தார். ஆளுநர் முதல் காவலர் வரை தமிழ் நாட்டில் யாருக்கும் பாதுகாப்பில்லை என்றும், தமிழ்நாடு சீர்கெட்டு இருப்பதை இந்த சம்பவம் தெளிவாக காட்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

 

காவலர்கள் தங்களை தற்காத்துக்கொள்ள புதிய உத்திகளைக் கையாள்வதற்கு பயிற்சி அளிக்க வேண்டும் எனவும் உடனடியாக நடவடிக்கை எடுத்து காவலர்களை காக்க வேண்டும் எனவும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியிருக்கிறார்.

 

தாக்கப்பட்ட காவல் உதவி ஆய்வாளரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய முதலமைச்சர் மு க ஸ்டாலின் நலம் விசாரித்தார்.

 

இதனை ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார். தாக்குதல் நடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறார். மார்க்ரெட்டிற்கு உயர்தர மருத்துவ சிகிச்சையை வழங்க அறிவுறுத்தி இருக்கும் முதலமைச்சர் 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கவும் ஆணையிட்டார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon