--- --:--:-- --

அபராதம் விதித்ததால் பெண் எஸ்.ஐ. கழுத்தறுப்பு..!

2

நெல்லையில் அபராதம் விதித்ததற்கு பழிதீர்க்கும் வகையில் காவல்துறை பெண் உதவி ஆய்வாளரை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நேற்று நள்ளிரவில் பழவூர் கிராமத்தில் கோயில் திருவிழா நடந்துள்ளது.

 

கோயில் திருவிழாவில் பாதுகாப்பு பணியில் உதவி காவல் ஆய்வாளர் மார்க்ரெட் இருந்துள்ளார். அப்பொழுது அந்த கோயில் திருவிழாவிற்கு வந்திருந்த ஆறுமுகம் என்ற நபர் கடந்த ஒரு மாதம் முன்பாக ஒரு வாகனத்தில் செல்லும் போது குடிபோதையில் இருந்ததாக கூறி அவர் மீது மார்க்ரெட் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்துள்ளார்.

 

அவரை நேரில் பார்த்தும் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்பொழுது தன் கையிலிருந்த பெரிய கத்தியால் அறுத்து கொலை செய்யவும் முயன்றுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon