பிலிப்பைன்ஸில் தமிழ்நாடு மாணவர் தற்கொலை..! தாயின் கதறல்..!
பிலிப்பைன்ஸ் நாட்டில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் தமிழகத்தை சேர்ந்த மருத்துவ மாணவரின் உடலை சொந்த ஊர் கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு பெற்றோர் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அடுத்த இருளபட்டியை சேர்ந்த பிரதீப் என்று அந்த மாணவர் பிலிப்பைன்ஸ் நாட்டில் டாபு நகரில் உள்ள தாவோ மெடிகல் ஸ்கூல் பவுண்டேஷன் என்ற மெடிக்கல் கல்லூரியில் எம்பிபிஎஸ் இறுதி ஆண்டு படித்து வந்தார்.
கடந்த 19ஆம் தேதி தனது அறையில் பிரதீப் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக பெற்றோருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதிர்ச்சியடைந்த பெற்றோர் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். மகனின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வரும் நடவடிக்கையில் தொய்வு ஏற்பட்டு உள்ளதாக கூறப்படும் அவர்கள் தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.






