காங். கட்சியில் இணைகிறாரா பிரஷாந்த் கிஷோர்?
தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்கான பணிகளை முக்கிய கட்சிகளான காங்கிரசும், பாஜகவும் இப்போதே தொடங்கியுள்ளன.
ஆட்சியை தக்கவைக்க பாஜகவும், ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் கட்சியும் தேர்தல் வியூகங்களை வகுத்து வருகின்றன. காங்கிரஸ் மேலிடம் தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோருடன் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வியூகங்களை வகுக்க அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
அண்மையில் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி அந்த கட்சியின் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பிரஷாந்த் கிஷோர் 600 டிஜிட்டல் பக்கங்கள் அடங்கிய நாடாளுமன்ற தேர்தல் வியூகம் விளக்க அறிக்கையை சமர்ப்பித்துள்ளார்.
இதற்கிடையே பிரஷாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாகவும் இதற்கான ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





