--- --:--:-- --

டேபிள் டென்னிஸ் வீரர் விஷாவின் உடல் தகனம்..!

7

மேகாலயா சாலை விபத்தில் உயிரிழந்த தமிழ் நாட்டில் இளம் டேபிள் டென்னிஸ் வீரர் விஷ்வா தீனதயாளன் உடல் வில்லிவாக்கம் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. மேகாலயாவில் நடைபெற்ற போட்டியில் கலந்து கொள்வதற்கு சென்றபொழுது 18 வயதான தமிழக வீரர் விஷ்வா சாலை விபத்தில் உயிரிழந்தார்.

 

அவரின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர் .மேலும் தமிழ்நாடு அரசு சார்பில் 10 லட்சம் ரூபாய் அவரின் குடும்பத்தினருக்கு நிவாரணத்தொகை வழங்கியுள்ளனர்.

 

இந்த நிலையில் விஷ்வா தீனதயாளன் உடல் தேசியக்கொடியில் பொருத்தப்பட்டு ஊர்வலம் எடுத்து செல்லப்பட்டு வில்லிவாக்கம் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon