--- --:--:-- --

15 வயது சிறுமியைத் தாக்கி பாழடைந்த வீட்டுக்குள் வீசியெறிந்த கும்பல்..!

4

10 வயது சிறுமியை கட்டையால் தாக்கி பாழடைந்த வீட்டில் வீசிச் சென்ற மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். திருவாரூர் அருகே தனது அத்தை வீட்டில் 15 வயது சிறுமி தனது தாயுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் பொருட்கள் வாங்குவதற்காக கடைக்கு சென்றுள்ளார்.

 

அப்பொழுது சிறுமியை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் சிறுமியை கட்டையால் தாக்கி கை கால்களை கட்டி பாழடைந்த ஒரு வீட்டிற்குள் தூக்கி வீசியதாக கூறப்படுகிறது. சிறுமி வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் அவரது அத்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

 

இதனையடுத்து அந்த சிறுமியை போலீசார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிறுமியை தாக்கியவர்கள் யாரென்றும் சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon