1 மணி நேரம் கொட்டித்தீர்த்த ஆலங்கட்டி மழை..!
கர்நாடகாவில் கோடை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் திடீரென ஆலங்கட்டி மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கர்நாடக மாநிலத்தில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்தது.
இந்த நிலையில் மாவட்ட அளவில் திடீரென்று கன மழை கொட்டி தீர்த்தது. ஆலங்கட்டியுடன் கூடிய மழையால் சுமார் ஒரு மணிநேரம் அந்த பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.





