டெட் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் ஆசிரியர் பணியில் நீடிக்க தகுதியில்லை..!
தகுதித் தேர்வில் தகுதி பெறாதவர்கள் ஆசிரியர் பணியில் நீடிக்க தகுதி இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. 2011 ஆம் ஆண்டுக்கு முன் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டவர்களில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களின் வருடாந்திர உயர்வை நிறுத்தி வைத்து தமிழக பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதனை எதிர்த்து ஆசிரியர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்தது. இதில் 12 ஆண்டுகள் அவகாசம் வழங்கியுள்ளது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு ஊதிய உயர்வு பெற உரிமை இல்லை என தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
இதற்கு பதிலளித்த மனுதாரர் தரப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுவது இல்லை என தெரிவித்தது இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அறிவியல், திறமை, தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்ளும் ஆசிரியர்களால் மட்டுமே திறமையாக பயிற்றுவிக்க முடியும் எனவும் தரமான ஆசிரியர் கல்வியே தற்பொழுது அவசியம் எனவும் தெரிவித்தார்.
எனது ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சி பெறாதவர்கள் ஆசிரியர் பணிக்கு தகுதி இல்லை எனவும் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.






