--- --:--:-- --

டிராக்டரில் லிப்ட் கேட்டு வந்த மாணவன் அதே டிராக்டரில் கீழே விழுந்து டயரில் சிக்கி பலி.!

8

ள்ளி முடிந்து லிப்ட் கேட்டு வந்த மாணவன் டிராக்டர் குலுங்கிய போது கீழே விழுந்து டயரில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் திருவண்ணாமலையில் நடந்துள்ளது.

 

திருவண்ணாமலை அடுத்த வேடியப்பன் கிராமத்தில் வசித்து வரும் கூலித்தொழிலாளி வெங்கடேஷ் என்பவரின் மகனான சந்தோஷ் அரசு பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று மாலை பள்ளிக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பும் வழியில் லிப்ட் கேட்டு வந்துள்ளார்.

 

டிராக்டர் பள்ளத்தில் ஏறி இறங்கிய போது சந்தோஷ் நிலைதடுமாறி கீழே விழுந்தான். இதில் சக்கரத்தின் பின்புறம் உள்ள சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதை பார்த்த வெங்கடேஷ் தப்பியோடிவிட்டார்.

 

சம்பவ இடத்திற்கு சென்ற திருவண்ணாமலை கிராமிய போலீஸார் மாணவன் சந்தோஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்த சிறுவனின் பெற்றோர் சம்பவ இடத்திற்கு வந்த மாணவனை உடலை பார்த்து கதறி அழுதுள்ளனர்.

 

Right Menu Icon