நீட் தேர்வு எழுதும் நேரம் அதிகரிப்பு..!
நீட் தேர்வு எழுதும் நேரத்தை அதிகரித்து தேசிய தேர்வு முகமை உத்தரவிட்டுள்ளது. அகில இந்திய அறிவியல் இளநிலை மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வை தேசிய தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு ஜூலை மாதம் 17ஆம் தேதி நடைபெற உள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு வரை நீட் தேர்வு எழுத மூன்று மணி நேரமாகவே அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்தாண்டுக்கான நேரம் 3 மணி 20 நிமிடங்கள் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மொத்தம் 200 கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் தேர்வு நேரம் 200 நிமிடமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்கது.





