கணவன் கண் முன்னே லாரி ஏறி தலை நசுங்கி உயிரிழந்த மனைவி.!
கடலூரில் லாரி மற்றும் ஆட்டோவிற்கு இடையே இரு சக்கர வாகனத்தில் இருந்து தடுமாறி விழுந்த பெண் கணவன் கண்முன்னே உடல் நசுங்கி பலியான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளன. மனைவியுடன் வந்து பொருட்களை வாங்கிக்கொண்டு அவர்களது பகுதிக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்பொழுது ஆட்டோ மற்றும் லாரிக்கு இடையே சிக்கியதால் நிலைதடுமாறி இருசக்கர வாகனத்தோடு கீழே விழுந்தார். அப்பொழுது இடதுபுறமாக பின்புறமாக வந்த லாரி மனைவியின் கழுத்தில் ஏறி இறங்கியது. இந்நிலையில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
தன் மனைவி தன் கண்முன் உயிரிழந்ததால் கதறி அழுதார். இந்த காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.





