ஏப்ரல் 5ல் அதிமுக கண்டனம் ஆர்ப்பாட்டம்..!
சொத்து வரி உயர்வை கண்டித்து வரும் 5-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அதிமுக அறிவித்துள்ளது.
தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றும் வகையில் திமுக அரசு தொடர்ந்து செயல்பட்டு வருவதாக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளனர்.
மக்கள் நலனை கருத்தில் கொண்டு சொத்து வரி உயர்வை திரும்பப் பெற வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.





