தமிழகத்தின் சில இடங்களில் இயல்பை விட வெப்பம் அதிகரிக்கும்..!
தமிழகத்தின் சில இடங்களில் இயல்பை விட வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
மன்னார் வளைகுடா பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை அதிகமாக இருக்கக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.






