--- --:--:-- --

பிரதமர் மோடிக்கு இ மெயிலில் வந்த கொலை மிரட்டல்..!

3

பிரதமர் மோடியை கொலைமிரட்டல் விடுத்தும் ஜெய்ப்பூரில் 20 இடங்களில் குண்டுகள் வெடிக்க செய்யவும் மிரட்டல் விடுத்து அனுப்பப்பட்டுள்ள ஈமெயிலில் உண்மை தன்மை குறித்து விசாரணை தீவிரம் அடைந்துள்ளது.

 

இதுகுறித்து தீவிரவாத தடுப்பு ஏஜென்சிகளுக்கு தேசிய புலனாய்வு முதன்மையின் உளவுத்துறை விடுத்த எச்சரிக்கை ஊடகங்கள் மூலம் கசிந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக 3 பேரை தீவிரவாத தடுப்புப் பிரிவினர் கைது செய்து மேலும் 5 பேரிடம் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

 

மேலும் 12 கிலோ ஆர்‌டி‌எக்ஸ் வெடிபொருள், மூன்று பேட்டரி கடிகாரங்கள், ஆறு பல்புகள், 3 கணக்டர் வயர்கள், ஒரு ஜீப் ஆகியவற்றையும் தீவிரவாதிகளிடமிருந்து போலீசார் கைப்பற்றி உள்ளனர். பல்வேறு இடங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon