சிவகார்த்திகேயன் பல உண்மைகளை மறைத்துள்ளார் என குற்றம்சாட்டும் தயாரிப்பாளர்..!
சம்பள பாக்கி தொடர்பாக பல உண்மைகளை மறைக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மிஸ்டர் லோக்கல் படத்திற்காக பேசப்பட்ட சம்பளத்தில் நான்கு கோடி ரூபாய் நிலுவையிலுள்ள சம்பளத்தை வழங்க தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு உத்தரவிடக் கோரி நடிகர் சிவகார்த்திகேயன் சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கில் மிஸ்டர் லோக்கல் படத்தின் கதை தனக்கு பிடிக்கவில்லை எனவும் அந்த படத்தின் இயக்குனராக ராஜேஷ் தான் வேண்டும் என சிவகார்த்திக்கேயன் கட்டாயப்படுத்தியதாக 20 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் 2 கோடியே 40 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என நடிகர் சிவகார்த்திகேயன் இரக்கமின்றி கேட்பதாகவும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கூறியுள்ளார். அதோடு மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் உண்மைத் தகவல்களை மறைத்து தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் தாக்கல் செய்துள்ள மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் ஞானவேல் ராஜா கூறியுள்ளார்.





