--- --:--:-- --

அரசு விடுதியில் பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை..!

4

ரசு மாணவர் விடுதியின் பின்புறம் பதினோராம் வகுப்பு மாணவன் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது சேலம் மாவட்டம் ஆத்தூரில் செயல்பட்டு வரும் அரசு மாணவர் விடுதியில் 150 மாணவர்கள் தம் பின் தங்கியுள்ளனர்.

 

இந்நிலையில் இன்று காலை விடுதியின் பின்புறம் உள்ள மரத்தில் மாணவன் தூக்கிட்டு இருப்பதாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மாணவி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

இந்த நிலையில் பள்ளி மாணவனின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Right Menu Icon